2 நாட்கள் சரிவுக்கு பின் 638 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

வியாழன், 22 ஜூலை 2021 (17:38 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று மும்பை பங்கு சந்தை 638.70 புள்ளிகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் முடிவடைந்த பங்குச் சந்தை புள்ளிகள் 638.70 உயர்ந்து 52,837.21 என்ற புள்ளியில் சென்செக்ஸ் வர்த்தகம் முடிவடைந்தது 
 
அதேபோல் நிப்ட் இன்று 191.95 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 15824.05  என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளையும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்