’எவ்வளவு பெரிய கேவலம்?’ - விஜயகாந்த் பேச்சை வள்ளுவருடன் ஒப்பிடுவது குறித்து தமிழருவி மணியன்

வெள்ளி, 6 மே 2016 (12:31 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சை, திருக்குறளுடன் ஒப்பிட்டு பேசுவது திருவள்ளுவருக்கே அவமானப்படுத்தும் செயல் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
 

 
கோவையை அடுத்த துடியலூரில், காந்திய மக்கள் இயக்கம் மற்றும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா ஆகியவை இணைந்துள்ள மாற்று அரசியல் கூட்டணி சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக திருமலைராஜன் போட்டியிடுகிறார்.
 
இவரை ஆதரித்து பேசிய தமிழருவி மணியன், ”இந்தியா சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகாலம் வரை, தமிழகத்தில் மதுவின் வாடையே இல்லை.
 
தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை ஏழு கோடிக்கும் மேல். இதில், ஒரு கோடி பேருக்கு மேல் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர். 1971ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மது விலக்கை தளர்த்தினார்.
 
அப்போது, அரசுக்கு வருமானம் ஆண்டுக்கு, 26 கோடி ரூபாய். ஆனால், இன்று வருவாய், 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டு மக்களை மதுவுக்கு அடிமையாக்கியதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் பங்குண்டு.
 
விஜயகாந்திடம் ஐந்து சதவீத வாக்கு வங்கி உள்ளதால், அவரது கூட்டணி கட்சியினர் அவரது பேச்சை திருக்குறளுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். இது திருவள்ளுவரையே அவமானப்படுத்தும் செயல்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்