ஓட்டலில் லிப்ட் பழுதானதால் நடுவழியில் சிக்கிய குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மீட்பு

திங்கள், 3 ஜூலை 2023 (16:23 IST)
நாகர்கோவிலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லிப்ட் பழுதாகி  பாதிவழியில் நின்றதால் அதிலிருந்து  2 குழந்தைக உள்பட 7 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கோர்ட்டுரோடு பகுதியில் இயங்கி வரும் ஓட்டலின் 2 வது மாடியில் ஒரு மினி மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது..

இதில், கலந்து கொள்ள உறவினர்கள், நபர்கள், எனப் பலரும் வருகை தந்தனர். சிலர் படிக்கட்டுகள் மூலம், அங்குள்ள லிப்ட் மூலம் 2 வது தளத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பெற்றோர் , குழந்தைகள் என மொத்தம் 7 பேர்  லிப்டில் செல்லும்போது,1 முதல் மாடியை கடந்தபோது  பாதிவழியிலேயே  நின்றுவிட்டது.

லிப்டை இயக்க ஓட்டல் நிர்வாகத்தின முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் துணிக்கடையில் உள்ள லிப்ட் ஆபரெட்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்களை வரவழைத்து, லிப்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு, சில மணி நேரத்தில் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்