நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் - சேதுராமன் அதிர்ச்சி தகவல்

புதன், 8 மார்ச் 2017 (16:18 IST)
ஓ.பி.எஸ் அணி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெற்று பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன்,  சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக ஒரு செய்தியை கூறி ஓ.பி.எஸ் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடை செய்தார்.


 

 
ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் இன்று காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
 
இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்து பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 7மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது சில நெருங்கிய பத்திரிக்கையாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசினார். இன்னும் 2 மாதங்கள் கழித்து நாங்தான் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். அதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், தற்போதுதான் 4 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நடராஜன், கோடியெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் நினைத்தால் சி.எம் ஆகிவிடுவோம். அதற்கு ஒரு தலையணை இருந்தால் போதும் எனக் கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை சேதுராமன் வெளியிட்டார்.
 
சேதுராமன் கூறிய செய்தி கேட்டு, ஓ.பி.எஸ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்