திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் தனி டிக்கெட்!

புதன், 7 ஜூலை 2021 (14:22 IST)
திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் தனி டிக்கெட் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள் ஆகியோர் இவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள் 
 
இலவசமாக பயணம் செய்யும் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகளிடம் வரும் உதவியாளர் ஆகியோர்களுக்கு பேருந்தில் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கட்டணமில்லா பயணச்சீட்டு என்றும் அந்த தனி டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் மாற்றத்தக்கதல்ல என்றும் கேட்கும் பொழுது அந்த டிக்கெட்டை நடத்துனர் மற்றும் செக்கிங் அதிகாரிகளுடன் காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். பரிசோதனைக்கு உட்பட்டது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த டிக்கெட் வெவ்வேறு நிறங்களில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்