தங்கமணியா? கிரிப்டோமணியா? கேலி செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

வியாழன், 16 டிசம்பர் 2021 (18:48 IST)
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியா? அல்லது கிரிப்டோமணியா? என்று கேலி செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது
 
ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.
 
ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மாண்புமிகு தளபதி அவர்களின் அரசு நிறைவேற்றி வருகிறது. கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை.  
 
கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்