செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு..17வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவு.!!

Senthil Velan

திங்கள், 29 ஜனவரி 2024 (14:06 IST)
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் காவலை, 17 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்று, அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ALSO READ: பாலியல் வழக்கு.! நீதிபதி எச்சரிக்கைக்கு பணிந்த ராஜேஷ் தாஸ்..!!
 
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்  முடிவடைகிறது.  இதை அடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரது சிறை காவலை, ஜனவரி 31வரை நீட்டித்து  நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், 17-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்