இந்த நிலையில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை புதிய தலைவர் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆம், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மற்றும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கே.டி.ராகவன், புரட்சி கவிதாசன், கோவை முருகானந்தம், நாராயணன் உள்ளிட்ட சீனியர் பாஜக நிர்வாகிகள் இருக்கும் நிலையில் அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.