தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் தன்னை எம்.ஜி.ஆரோடு தொடர்புபடுத்தி பேசி வந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் எழுந்தது. எம்ஜிஆர் விரும்பிய நல்லாட்சியை அதிமுக நடத்தி வருவதாகவும், கமல் வாக்குகளுக்காக எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவதாகவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “கமல்ஹாசனை மக்கள் நடிகராகவே பார்க்கின்றனர். இன்னும் அவரை அரசியல் கட்சி தலைவராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் பேசுவது என்னவென்று அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரிவதில்லை” என கிண்டலாக கூறியுள்ளார்.