கொடைக்கானலில் ஜாலியாக இருந்துவிட்டு வரட்டும்.. நாங்க அரசியல் செய்ய மாட்டோம்: செல்லூர் ராஜூ

Mahendran

புதன், 1 மே 2024 (18:35 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ள நிலையில் இதை நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு என்று செய்தியாளர்களை சந்தித்தபோது முதலமைச்சர் கொடைக்கானல் சென்றது குறித்த கேள்விக்கு ’அவர் தாராளமாக கொடைக்கானல் சென்று குடும்பத்துடன் அந்த குளுமையை அனுபவித்து வரட்டும், நாங்கள் அதை அரசியலாக்க மாட்டோம், அவருக்கும் குடும்பம் இருக்கிறது, ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் அவர் ஓய்வு எடுப்பதில் தவறில்லை என்ற தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் எங்கள் அம்மா ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுத்தபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி விமர்சனம் செய்தார் என்றும் அவர்கள் போல் நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம் என்றும், முதல்வர் ஸ்டாலின் தாராளமாக ஓய்வெடுத்து விட்டு திரும்பி வந்து தனது பணிகளை தொடரட்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்