வடபழனி முருகன் கோயிலில் 2 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கை

புதன், 21 டிசம்பர் 2022 (12:17 IST)
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பணி செய்த இரண்டு ஊழியர்களை அதிரடியாக அமைச்சர் சேகர்பாபு சஸ்பெண்ட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்களில் அமைச்சர் சேகர்பாபு தான் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் என்பதும் அவர் அனைத்து கோவில்களுக்கும் அதிரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடபழநி ஆண்டவர் கோயில் டிக்கெட் விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து அதிரடியாக நேரில் சென்று ஆய்வு செய்தார் 
 
அப்போது தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி மற்றும் டிக்கெட் பார்த்து பக்தர்களை உள்ளே அனுப்பும் ஊழியர் சிவத்தம்பி ஆகிய இருவரையும் அவர் சஸ்பெண்ட் செய்தார் 
 
வடபழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்