டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சீமான் வலியுறுத்தல்

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (14:36 IST)
டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் அவர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது என்றும் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போல் அவர்களை தமிழ்நாடு அரசு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் முக்கிய கோரிக்கையாக இருந்தாலும் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும் வரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை உரிமைகள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதில் நாம் தமிழர் கட்சி உறுதியாக உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
எனவே தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் டாஸ்மாக் விற்பனை கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்