பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? சீமான் சொல்வது என்ன?

திங்கள், 13 பிப்ரவரி 2023 (18:10 IST)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய நிலையில் அதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறிய போது எங்கள் அண்ணன் பிரபாகரன் தனது சக வீரர்களை சாக கொடுத்துவிட்டு அவர் மட்டும் பத்திரமாக நாட்டை விட்டு தப்பி சென்றிருப்பார் என்று எப்படி நினைக்க முடியும்?
 
எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு செல்ல மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை போட்டவர் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி போகும் கோழை அல்ல பிரபாகரன்
 
போர் முடிந்து பேரழிவை சந்தித்த பிறகும் பிரபாகரன் 15 ஆண்டுகள் ஓரிடத்தில் பதுங்கி இருப்பார், எதுவுமே பேசாமல் இருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் பழ நெடுமாறன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒரு நாள் நேரில் வந்தால் அதன் பிறகு அது குறித்து பேசுவோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்