முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு? சீமான் சந்தேகம்!

சனி, 23 ஜனவரி 2021 (16:18 IST)
முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என சசிகலா சந்தேகம். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.
 
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும், அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் முதல்வரின் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 4 ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில், திடீரென உடல் நலம் குன்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்