கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த சீமான், சோடா பாட்டில் எல்லாரும் வீசுவார்கள். ஆனால் யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும். ஜீயர் மன்னிப்பு கேட்டுவிட்டதால், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.