காமெடி சேனல் பாருங்க விஜயகாந்த் ஃப்ரீ அட்வைஸ்

செவ்வாய், 10 மே 2016 (18:37 IST)
தேமுதிக-மக்கள் நல கூணியில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்தியாவை ஆதரித்து அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


 
 
தற்போது தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் பல செய்தி சேனல்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு தங்கள் பங்கிற்கு தேர்தல் களத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகின்றனர்.
 
திமுக, அதிமுக, மக்கள் நல கூட்டணி என ஓவ்வொரு சேனல்களும் மாறி மாறி ஆட்சியை பிடிக்கும் என கூறி தமிழக தேர்தல் களத்தை குழப்பமாகவே வைத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக விஜயகாந்த், ஒரு செய்தி சேனலில், திமுக ஜெய்க்கும் என்றும், ஒரு செய்தி சேனலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சேனல்களை பார்த்தால் கண்ணை கட்டுகிறது. இவற்றை பார்பதற்கு பதிலாக காமெடி சேனலை பாருங்கள், இல்ல வேற சேனலை மாத்திருங்க என தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்