அதி தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்தது அசானி - வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதன், 11 மே 2022 (08:17 IST)

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக உருவான அசானி தற்போது புயலாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது.


கடந்த 8ஆம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்தப் புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தப் புயல் ஆந்திராவில் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நிலையில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். பிற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் தென் பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்