தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. மதுரை, சேலம், கரூர், திருச்சி, திருவள்ளூர், திருத்தணி, வேலூர், ஈரோடு, தர்மபுரி, சென்னை, கோவை நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. இதில், மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை நீடித்து, அதன் பிறகு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும், வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.