பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

திங்கள், 24 அக்டோபர் 2022 (07:55 IST)
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் நாளை வேலை நாள் என்பதால் இன்று இரவே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இந்நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டது
 
இந்த கோரிக்கை குறித்து கருத்து கூறிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை விடுமுறை விடுவது குறித்து தமிழக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்
 
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்