திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தை மலையப்பன் என்பவர் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்ற பகுதியைச் சேர்ந்த மலையப்பன் கடந்த பல ஆண்டுகளாக பள்ளி வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மாணவ மாணவிகளை மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்வார் என்ற பெயர் அவருக்கு இருந்த நிலையில் இன்று அவர் வாகனம் ஓட்டும்போது திடீரென நெஞ்சுவலியால் அவஸ்தைப்பட்டாaர்.