எச்சரிக்கை: சாலையில் கிடந்த சாக்லேட்டுகளை சுவைத்த மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம்

வியாழன், 24 நவம்பர் 2016 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் ரெயில் நிலையம் அருகே சாலையில் கொட்டிக்கிடந்த சாக்லெட்டுகளை சுவைத்த பள்ளி மாணவ-மாணவிகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

 
விழுப்புரம் மாவட்டம் கூத்தக்குடி பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே பை-பாஸ் சாலையில் ஏராளமான சாக்லேட்டுகள் கொட்டிக்கிடந்துள்ளது. நேற்று காலை அவ்வழியாக பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள், சாலையில் கிடந்த சாக்லேட்டுகளை எடுத்துச்சென்றன்ர்.
 
சிலர் அவர்களது பைகளில் வைத்துக்கொண்டனர், சிலர் உடனே சுவைத்துள்ளனர். பள்ளிக்கு சென்ற பின் அந்த சாக்லேட்டுகளை சுவைத்த சில மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
 
உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2 பள்ளிகளை சேர்ந்த 110 மாணவ, மாணவிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இச்சம்பவம் அறிந்து காவல்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் விசாரித்ததில் சாலையில் கிடந்த சாக்லேட்டுகளை சுவைத்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. சாலையில் யார் சாக்லேட்டுகளை கொட்டியது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் விரைந்து, கொட்டிக்கிடந்த சாக்லேட்டுகளை சேகரித்து, கிண்டியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  
 
சுமார் இரண்டு மாதங்களுக்கு போதை சாக்லேட்டுகள் பிடிப்பட்டது. அதுவும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் சிக்கியது. இந்த சாக்லேட்டுகளும் போதை சாக்லேட்டுகளாக இருக்க வாய்ப்புள்ளதாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்