நெல்லையில் பரபரப்பு: ரெயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன் படுகாயம்

திங்கள், 5 டிசம்பர் 2016 (13:45 IST)
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் பிள்ஸ்-2 படித்து வருகிறார். உறவினர் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ரெயில் மூலம் நெல்லைக்கு வந்து சேர்ந்தார்.
 
ரெயில் நிலையத்தில், யுவராஜ் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகள் மீது செல்ஃபி எடுக்க மேலே ஏறியுள்ளார். அப்போது மின்சார கம்பியில் அவரது கை உரசியுள்ளது. இதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டார். 
 
இதைக்கண்டவர்கள் யுவராஜை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது யுவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்