4 வயது பள்ளி மாணவி பலி - டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதால் விபத்து

திங்கள், 5 செப்டம்பர் 2016 (17:11 IST)
டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
திருப்பூர் பழவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த மகேந்திரன். இவரது 2வது மகள் லட்சுமி (வயது 6) இவள் அந்த பகுயில் உள்ள வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். மானவி லட்சுமி தினமும் பள்ளி வேனிலேயே பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
 
இந்நிலையில் மானவி லட்சுமி நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வேனில் சென்றாள். நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளி மதியம் வரை செயல்பட்டது. பள்ளி முடிந்து மானவி லட்சுமி வேனில் ஏறி மாணவியின் வீட்டுக்கு அருகே சென்றதும் மானவி வேனைவிட்டு கீழே இறங்கி முன்புறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார்.
 
அப்போது அந்த வேன் டிரைவர் பழனிவேல் (55) தொலைபேசியில் பேசிக்கொண்டு குழந்தை சென்றதை கவனிக்காமல் குழந்தை மேல் வேனை மோதிவிட்டார் என்று அப்பதியில் உள்ள அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கூறினார்கள்.
 
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தமான லட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தாள். உடனே அக்கம்பக்கத்தினர் மாணவி லட்சுமியை மீட்டு உடனே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 
அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இன்று இரவு 7.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

செய்தியாளர் : ஆனந்த்குமார்

வெப்துனியாவைப் படிக்கவும்