பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா இன்றும் ஆஜராவார் என தகவல்!

புதன், 26 மே 2021 (07:56 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டது என்பதும் மூன்று மணி நேரம் நடந்த இந்த விசாரணை இன்றும் தொடர உள்ளதாக கூறப்படுகிறது
 
பாலியல் புகார் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா இன்றும் சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நேற்று மூன்று மணி நேரம் நடந்த போலீஸ் விசாரணையில் அடுத்து இன்றும் அந்த விசாரணை தொடங்க உள்ளதாகவும் இதனை அடுத்து மேலும் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் போலீசார் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்