தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் இந்த பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டு செய்யும் என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து எதிர்கட்சியினர் இதனை வரவேற்றுள்ளனர். பொதுத் தேர்வு ரத்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், ”5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம், தேர்வை ரத்து செய்தது வரவேற்க்கத்தக்கது” என கூறியுள்ளார்.
அதே போல் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த எம்.பி. ரவிக்குமார், ”பொதுமக்களின் அழுத்தம், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தமிழக அரசு 5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தத்க்கது” என கூறியுள்ளார்.