இந்நிலையில் சசிகலா பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல நாளில் முதல்வராக பதவியேற்கலாம் என ஜோதிடர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் யார் எப்படி மாறுவார்கள் என்பது தெரியாது. கட்சிக்குள்ளும் சிலர் ஒரு மாதிரியாக பேசுகின்றனர் என்பதால் சசிகலாவின் கணவர் நடராஜன் சசிகலாவை உடனடியாக முதல்வராக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது வரும் 29-ஆம் தேதி பொதுக்குழு முடிந்தவுடனே சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்றுக் கொள்வார் என்று சொல்கிறார்கள். அதற்கான வேலைகளிலும் நடராஜன் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்து விடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதற்கான தொகுதிகள் கூட முடிவாகிவிட்டதாம்.