வாய்பில்ல ராஜா வாய்பில்ல... சசிகலாவுக்கு நோ எண்ட்ரி போடும் அதிமுக அமைச்சர்கள்!

வெள்ளி, 17 ஜூலை 2020 (10:12 IST)
சசிகலா விரைவில் வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது என அதிமுக அமைச்சர் காம்ராஜ் திட்டவட்டம். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம் அடுத்த ஆண்டில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. 
 
தற்போது சசிகலா விரைவில் வெளியாவார் என்றாலும், அதற்கு பிறகான தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் காமராஜ், சசிகலா சிறையிலிருந்து வந்தால் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின் படி ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் செம்மையாக நடத்தி வருகின்றனர். இதில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் 2 வது கருத்தே கிடையாது. 
 
சசிகலா விரைவில் வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என எத்தனையோ பேர் எதிர்பார்த்தனர். ஆனால் யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். 
 
அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி ஜெயகுமார், வீரமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சசிகலா நிச்சயம் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்