ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் தினகரனின் ஆதரவாளரும், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏவுமான கனகராஜ் 'நான் நினைச்சா ஆட்சி கலைந்துவிடும்' என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தடியடி குறித்து கருத்து தெரிவித்த சூலூர் அதிமுக அம்மா அணி எம்எல்ஏ கனகராஜ், 'மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார். அணி மாறுவீர்களா என்று கேட்டதற்கு, எதற்கு அணி மாறவேண்டும். ராஜினாமா தான் செய்வேன். ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். என் தொகுதி மக்கள் சம்பாதிப்பார்கள், சம்பாதிக்கட்டும் என்று கூறினார்.