சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் செல்ல முடியுமா?

ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (13:03 IST)
தமிழக மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ளபோது சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
நேற்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். சசிகலா தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சி அமைத்தது. ஓ.பி.எஸ். அணி பெரும் அதிர்ச்சியில் தோல்வி அடைந்தது.
 
நேற்று சட்டசபையில் நடந்த கலவரம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என்று ஆளுநரிடம் குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தமிழக மக்கள் சசிகலா தலைமையிலான ஆட்சி அமைவதை விரும்பவில்லை. இந்நிலையில் சசிகலா அதாரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். இதையடுத்து சசிகலா ஆதரவு எம்.எம்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்