பழி தீர்க்கும் சசிகலா தரப்பு - தாக்குப் பிடிப்பாரா ஓ.பி.எஸ்?

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (09:01 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, சசிகலா தரப்பு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுக 2 அணிகளாக சிதறியது. ஆனால், இறுதில் சசிகலா ஆதரவுபெற்ற எடப்பாடி பழனிச்சாமியே தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தார். அதேபோல், சசிகலாவின் நெருங்கிய உறவினரான டி.டிவி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னதான், ஆட்சியையும், கட்சியையும் சசிகலா தரப்பு கைப்பற்றி விட்டாலும், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்-ன் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதன் விளைவாக, ஓ.பி.எஸ்-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என தினகரனிடம் கட்டளையிட்டுள்ளாராம் சசிகலா. எனவே, ஓ.பி.எஸ் பக்கம் சென்ற அதிமுகவினர் மீண்டும் தாய் கழகத்தில் வந்து இணைய வேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தினகரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
இது ஒரு பக்கம் எனில், ஓ.பி.எஸ் தற்போது தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் 6 மாத அவகாசம் கேட்டும், அவருக்கு சாதகாமன பதிலை அரசு தரவில்லை. எனவே, அவர் வாடகைக்கை வீடு தேடிக் கொண்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
 
அதேபோல், ஜெ.வின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ஆர்.கே.நகரில் ஒரு பிரமாண்ட விழாவிற்கு ஓ.பி.எஸ் அணி ஏற்பாடு செய்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு நடத்திட்ட உதவிகளையும் ஓ.பி.எஸ் வழங்க உள்ளார். எனவே, மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சசிகா தரப்பு, இந்த விழாவில் குழப்பம் ஏற்படுத்த திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
எனவே, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என காவல் துறையை நாடினார் ஓ.பி.எஸ். ஆனால், அங்கிருந்து எந்த சாதகமான பதில் இல்லையாம். இதனால், எந்த பிரச்சனையும் இல்லாமல், இந்த விழா சுமூக நடக்க வேண்டும் என்ற அச்சத்தில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ். மேலும், இன்று ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அதிமுக மேலிட உத்தரவின் காரணமாக, போலீசார் அவருக்கு இன்னும் நேரம் ஒதுக்கி தரப்படவில்லை எனத்தெரிகிறது.
 
இப்படி நான்கு பக்கமும் சசிகலா தரப்பு தனக்கு குடைச்சல் தருவதால், என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்