ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றியும், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது பற்றியும் முதல் முறையாக நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “ ஜெ.மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க மருத்துவமனை சென்றேன். ஆனால் முடியவில்லை. அவர் இறந்த போது, யார் முக்கியமானவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்றுதான் எல்லோரும் இருந்தார்களே தவிர, உண்மையான உணர்ச்சியோடு யாரும் அங்கே நிற்கவில்லை.