ஓ.பி.எஸ் போல் ஆயிரம் பேரை பார்த்துள்ளேன் - சசிகலா அதிரடி

திங்கள், 13 பிப்ரவரி 2017 (14:43 IST)
அதிமுகவிற்கு ஓ.பி.எஸ் துரோகம் செய்து விட்டதாகவும், அவரைப் போல் ஆயிரம் பேரை நான் பார்த்து விட்டேன், எனவே எனக்கு பயம் இல்லை என சசிகலா கூறியுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், தமிழக அரசியல் பரபரப்பான நிலையிலேயே இருக்கிறது. அதைத் தொடர்ந்து, இன்று போயஸ் கார்டனில், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
 
ஜெயலலிதா மரணம் அடைந்தவுடனேயே, கட்சியை உடைக்கும் வேலை நடந்தது. எனவே, ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக வேண்டும் என நான் வற்புறுத்தினே. ஆனால், என்னை என்னை முதல் அமைச்சர் ஆகுமாறு ஓபிஎஸ் வற்புறுத்தினார். ஆனால், எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டேன். நான் நினைத்திருந்தால், அப்போதே முதல்வர் ஆகியிருப்பேன்.
 
பெரியகுளத்தில் சாதரணமாக இருந்த ஓ.பி.எஸ்-ஐ முதல்வர் ஆக்கினார் ஜெ. ஆனால், அவர் துரோகம் செய்துள்ளார்.
 
எம்.ஜி.ஆர் மறைந்த போது, ஜானகியின் உறவினர்கள், சசிகலாவை தாக்கினார்கள். அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். அதன் பின் எனக்கு அரசியலே வேண்டாம் என அவர் கூறினார். ஆனால், ‘ உங்களை இழிவு படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என அவரின் எடுத்து சொல்லி, அரசியலில் ஈடுபட வைத்தேன். அதன்பின் அதிமுக இந்த வளர்ச்சி அடைந்துள்ளது.
 
ஆனால், சட்டசபையில் ஓ.பி.எஸ்-ஸின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உங்களுக்கே எங்கள் ஆதரவு, நாங்கள் இருக்கிறோம் என ஓ.பி.எஸ்-ஸிடம் துரை முருகன் கூறினார். ஆனால், அதற்கு ஓ.பிஎஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் ஆதரவு தேவையில்லை என அவர் கூறியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
 
எனவே, இதற்கு மேல் விட்டால் சரிவராது என நான் முடிவெடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலைக்கு தள்ளியவர் ஓ.பி.எஸ்தான். நான் எதற்கும் பயப்படவில்லை.. ஓ.பி.எஸ்-ஐ போல் ஆயிரம் பேரை நான் பார்த்துவிட்டேன். நானும், ஜெ.வும் இரு பெண்மணிகளாக சேர்ந்து இவ்வளவு தூரம் வந்துள்ளோம். எனவே, நான் சாதித்துக் காட்டுவேன்” என அவர் பேசினார்.
 
இதற்கு மேல் விட்டால் சரிவராது என முடிவெடுத்தேன். இந்த நிலைக்கு ஓ.பன்னீர் செல்வமே காரணம் என சசிகலா கூறியிருப்பதன் மூலம், அவரிடமிருந்து கட்டாயமாக, ராஜினாமா கடிதத்தை வாங்கியதை அவர் மறைமுக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்