ஜெ. வை மறைத்து வைத்துள்ளனர் : பொங்கி எழும் சசிகலா புஷ்பா

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (13:40 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்று சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
உடல் நலக் குறைபாடு காரணாமக, முதல்வர் ஜெயலலிதா கடந்த 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சில பரபரப்பான கருத்துகளை கூறியுள்ளார்.  வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இந்த சூழலை, அவரின் அருகிலிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. வேண்டுமென்றே அவரை மறைத்து வைத்துள்ளனர்.  அவரை நேரில் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரை சுற்றி மோசடி நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்