அவரை சந்தித்தேன் அவர் நலமாக உள்ளார் என பொன்னையன் சொன்னார். அமைச்சர்களும் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக கூறினர். ஆனால் ஜெயலலிதாவை அமைச்சர்கள், பொன்னையன் உள்ளிட்ட யாரும் சந்திக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சசிகலா தான் அவ்வாறு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அறிவுருத்தியதாக பேசப்படுகிறது. மேலும் தற்போது சசிகலா தான் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகவும், அமைச்சர்களும் அவர் சொல்வதை ஆமோதித்து கேட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.