மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து மனு கொடுத்த சசிகலா புஷ்பா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களிடத்தில் சந்தேகம் உள்ளது.
அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளியே கொண்டுவர வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருடன் சசிகலா மட்டுமே இருந்தார். ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் வந்தபோதும் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது எடுத்த போட்டோ கூட வெளியிடப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள பன்னீர் செல்வத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். தற்போது அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும் திட்டமிட்டு இறங்கியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.