இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சசிகலா புஷ்பா தனது கணவருடன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது முன்ஜாமீன் வக்காலத்தில் எப்படி கையெழுத்திட்டார் என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கோ.புதூர் போலீசார் சசிகலாபுஷ்பா, அவரது கணவர், மகன் மீது நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்தல், கையெழுத்தை மோசடியாக போட்டு போலி ஆவணங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சசிகலா புஷ்பா கைது விரைவில் நடக்கலாம் என கூறப்படுகிறது.