சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு.! என்ன தகுதி இருக்கிறது.? கே.பி.முனுசாமி காட்டம்..!

Senthil Velan

வியாழன், 6 ஜூன் 2024 (12:58 IST)
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து போட்டியிட்ட, ஓபன்னீர் செல்வத்திற்கு,  அதிமுக குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று  அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
 
அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.
 
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி,  குழப்பத்தை ஏற்படுத்தவே அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்கிறார் என்றும் அதிமுக தலைவர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரமாகியும் யாரும் சென்றதாக தெரியவில்லை என்றும் கூறினார்.
 
அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை என்று அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் ஓ.பி.எஸ் என்றும் அவர் கூறினார்.
 
அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றவர் ஓபிஎஸ் என்று முனுசாமி தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து போட்டியிட்ட, ஓ.பன்னீர் செல்வத்திற்கு,  அதிமுக தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ்ஸுக்கு இனி அதிமுகவை பற்றி பேச எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

ALSO READ: விஜயகாந்தின் அரசியலை முடித்து வைத்தவர் பிரேமலதா.! மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்..!!
 
அண்ணாமலை பொய் சொல்வதில் வல்லவர் என்றும் தமிழக மக்களின் நலன் கருதியே பாஜகவுடன் கூட்டணி முடித்துக் கொண்டோம் என்றும் அவர் கூறினார்.  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கே.பி முனுசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்