கணவரிடம் பேச பழ. நெடுமாறனை தூது விட்ட சசிகலா

புதன், 18 ஜனவரி 2017 (09:17 IST)
சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தல் குடும்ப அரசியல் செய்பவர்களைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று அவர் பேசினார்.
 

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன் ஜெயலலிதா முதல்வராக பாடுபட்டது நான்தான் என்றார். மேலும் எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தது. நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்.

நாங்க குடும்ப ஆட்சிதான் பண்ணுவோம். என்ன பண்ணுவீங்க? நாங்கதான் ஜெயலலிதாவைக் காப்பாற்றினோம். ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்றும் நடராஜன் கூறினார்.

 நடராஜனின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதனால் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு வழியில்லாமல் அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது கணவர் பேச்சால் நிலவி வரும் சூழ்நிலையை புரிந்துகொண்ட சசிகலா மிகவும் கவலை அடைந்ததாக கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் பழ. நெடுமாறனை தொடபுகொண்ட சசிகலா நான் சொன்னால் அவர் கேட்க மறுக்கிறார். நீங்கள் அவரிடம் பேசி இனி இவ்வாறு பேச வேண்டாம் என்று கூறுமாறு சசிகலா வேண்டுகோள் விடுத்தாராம். அதற்கு நெடுமாறனும் நிச்சயம் அவரிடம் நான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்