தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த வரை, தொண்டர்கள் முதல் முத்த அமைச்சர்கள் வரை அவரை சந்திக்கும் போது, சட்டென காலில் விழுவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவை அடுத்த அதிமுக தனது அடுத்த தலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெ.வின் தோழியான சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் நேரிடையாகவே சென்று அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படி சசிகலாவை போயஸ் கார்டனில் சந்திக்கும் நிர்வாகிகள் அவரது காலில் விழுகின்றனர். ஆனால், யாரும் என் காலில் விழ வேண்டாம் என சசிகலா கண்டிப்பாக கூறிவிட்டாராம். இது அமைச்சர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிகிறது.