233 நாட்களுக்கு பின்னர் சென்னை வந்தார் சசிகலா

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (22:47 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 233 நாட்களாக சிறையில் இருந்த சசிகலா இன்று பரோலில் வெளியே வந்தார்.



 
 
முன்னதாக அவருக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த விமானத்தை பிடிக்க முடியாமல் காலதாமதம் ஆகிவிட்டதால், சாலை வழியே காரில் சென்னைக்கு அவர் கிளம்பினார்.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் சசிகலா சென்னை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் மட்டும் பரோலில் வந்துள்ள சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகல் வீட்டில் தங்கவுள்ளதாகவும், நாளை காலை அவர் கணவர் நடராஜன் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
சசிகலாவின் சென்னை வரவால்  தமிழக அரசியலில் திருப்பங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்