உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலா, விசாரணை ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரம்மாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாகவ்வே, ஜெ.வின் உடல்நிலை எப்படி பாதிக்கப்பட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஜெ. மருத்துவமனையில் இருந்த போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமைச்சர் ஓ.பி.எஸ், தம்பிதுரை, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் அவரை பார்த்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.