முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி, உயிர் தோழி என்றெல்லாம் கூறப்படும் சசிகலாவுக்கு சிறையில் புதிய தோழி ஒருவர் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 24 வயதே ஆன பாமிலா தான் சசிகலாவின் சிறை தோழியாம்.
சசிகலா பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறையில் அடைக்கப்படும் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் பாமிலா திருட்டு வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறைக்கு வந்துள்ளார். சசிகலா, இளவரசி ஆகியோரிடம் சிறையில் அதிகமாக பேசும் நபர் இவர் தான்.
தமிழ் நன்றாக பேசும் பாமிலா தான் இப்போது சசிகலாவுக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் சிறையில் செய்து வருகிறாராம். சசிகலா, இளவரசிக்கு வரும் உணவுகளை அவர்களுடன் சமமாக உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு இவர்களது நட்பு வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் மூவரும் சாப்பிட்ட பின்னர் தான் மற்ற கைதிகளுக்கு மீதமிருக்கும் உணவுகளை வழங்குவார்களாம். மேலும் இவர்களுக்கு தினமும் மூன்று வேளையும் வீட்டில் இருந்து தான் சாப்பாடு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே போயஸ் கார்டனில் சமையல் செய்து வந்தவர் தற்போது பெங்களூர் அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.