தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் கட்சியை காப்பாற்றா தான் வருவதாய் சசிக்கலா பேசியுள்ளதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிக்கலா பேசுவதாய் ஆடியோ ஒன்று வெளியான நிலையில், மீண்டும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் “கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி அழிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. கட்சியை காப்பாற்ற சீக்கிரம் வருவேன்” என பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.