அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒரேயடியாக ஒதுக்கி வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதற்கு எதிர்மாறான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் சசிகலா. அவர் சிறைக்கு செல்ல நேரிட்டபோதும் கூட அவரது குடும்பத்தை சேர்ந்த தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி கட்சியையும் ஆட்சியையும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்தார்.
அதன் ஒரு கட்டமாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா மற்றும் தினகரனை பதவிகளில் இருந்து தூக்கி அதனை தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சூழலில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அளித்த பேட்டி ஒன்றில் சசிகலாவும் தினகரனும் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என அதிருப்திக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார். தம்பிதுரையின் இந்த கருத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.