சரத்குமார் உடல்நிலை குறித்து ராதிகா விளக்கம்

வியாழன், 23 ஜூன் 2016 (14:00 IST)
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முன்னாள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். கடந்த தேர்தலில் அவர் விஷால் அணியிடம் தோல்வியை தழுவினார்.


 


அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து திருச்செந்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.
 
தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இதுபற்றி அவரின் மனைவி ராதிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “சரத்குமார் பற்றி வெளியான செய்திகளில் உண்மையில்லை. தேவையில்லாமல் தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். அவருக்கு வயிற்றுக்கோளாறு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்