தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவர்கள் முடிந்த வரை சிகிச்சை அளித்து வருகிறார் என அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மகளும், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனருமான சங்கிதா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனர் சங்கிதா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் “முதல்வரின் உடல்நிலையை எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்களால் இயன்ற வரை அவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.