12ம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் சனாதன பாடம்! – வைரலாகும் புகைப்படம்!

புதன், 13 செப்டம்பர் 2023 (10:07 IST)
தமிழ்நாடு அரசின் பள்ளி பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்து பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகின. பல பாஜக பிரமுகர்களும், இந்து மத அமைப்புகள் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் 12ம் வகுப்பு புத்தகத்தில் சனாதனம் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு அறவியலும், இந்திய பண்பாடும் என்ற புத்தகத்தில் ”சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம்” என்று சனாதனத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளியே சனாதன ஒழிப்பு பேசிக் கொண்டிருக்கையில் பள்ளி பாடப்புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவான பாடங்கள் இடம்பெற்றுள்ளதால் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்