ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களத்தில் குதித்த சமுத்திரக்கனி!

திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:49 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டதில் நடிகரும்,  இயக்குனருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார்.

 
 
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போரட்டத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 23 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை பலர் இறந்து உள்ளனர். ஆனால் மருத்துவமனையில்  அவர்களின் இறப்பு இயற்கையானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இந்த ஆலையை அகற்றவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறை மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடம். அதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கிருந்து ஸ்டெர்லைட் ஆலையை இங்கிருந்து துரத்தும் வரை போராட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்