இந்த விபத்தில் உணவருந்த வந்த இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். பரோட்டா மாஸ்டர் மருது படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது டிராக்டரை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து டிராக்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.