எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு: மதுரையில் பரபரப்பு!

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:03 IST)
எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு: மதுரையில் பரபரப்பு!
மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பெரியார் திருவள்ளுவர் உள்பட பல சிலைகளில் அவ்வப்போது மர்ம நபர்கள் காவித் துணியை அணிந்து வரும் சம்பவங்கள் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி உடை அணிந்து சென்று உள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்